Subscribe Us

200 ரூபாவிற்கு பெற்றோல் வழங்க முடியும்! அரசாங்கம் வரியை நீக்க வேண்டும் - ஜானக வங்கும்புற அதிரடி கோரிக்கை.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதால், எரிபொருள் மீதான அசாதாரண வரிகளை அரசாங்கம் உடனடியாக நீக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வங்கும்புற தெரிவித்துள்ளார்.

ஜானக வங்கும்புற வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தற்போது ஒரு லீட்டர் எரிபொருளுக்கு அரசாங்கம் பின்வரும் தொகையை வரியாக அறவிடுகின்றது:

​பெற்றோல்: ஒரு லீட்டருக்கு 117 ரூபா வரி அறவிடப்படுகிறது.

​டீசல்: ஒரு லீட்டருக்கு 100 ரூபா வரி அறவிடப்படுகிறது.

​மண்ணெண்ணெய்: ஒரு லீட்டருக்கு 15 ரூபா வரி அறவிடப்படுகிறது.

பெற்றோல் ஒரு லீட்டருக்கு அறவிடப்படும் 117 ரூபா வரியை அரசாங்கம் நீக்கினால், ஒரு லீட்டர் பெற்றோலை வெறும் 200 ரூபாவிற்கு பொதுமக்களுக்கு வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் மீது மேலதிக சுமையைப் சுமத்தாமல், இந்த வரிக் குறைப்பை மேற்கொள்வதன் மூலம் வாழ்க்கைச் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

​உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வடைந்து வரும் சூழலில், உள்ளூர் சந்தையில் வரிகளைக் குறைப்பதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஊடகங்களில் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Quick Info
Full Details
Closing Date
Status
More Jobs
Interview Preparation Tools
Electricity Bill
Water Bill
GIF

Post a Comment

0 Comments