நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மற்றும் மோதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பலியானவர்களில் 5 சிறைக் காவலர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துரதிர்ஷ்டவசமான கலவரத்தில் நூற்றுக்கணக்கான கைதிகள் மற்றும் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு, தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments