Subscribe Us

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீட்டுக்கே வரும் அதிகாரிகள் - மார்ச் 28-க்குள் தகவல்களை உறுதிப்படுத்துவது எப்படி?

இலங்கை நலன்புரி நன்மைகள் சபையினால் (Welfare Benefits Board) முன்னெடுக்கப்படும் 'அஸ்வெசும' (Aswesuma) நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்களின் தகவல்களை உறுதிப்படுத்தும் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பின் போது நீங்கள் செய்ய வேண்டியவை:

தகவல்களைப் புதுப்பித்த விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து விபரங்களைச் சேகரிப்பார்கள். இதன்போது விண்ணப்பதாரர்கள் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்:

1- கணக்கெடுப்பு அதிகாரி வரும் நாளில் விண்ணப்பதாரர் அல்லது பொறுப்பான நபர் வீட்டில் இருக்க வேண்டும்.

2- உங்களது அலைபேசிக்கு வரும் அதிகாரப்பூர்வ குறுஞ்செய்திகளை உன்னிப்பாகக் கவனியுங்கள்.

3- 18 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரினதும் தேசிய அடையாள அட்டைகளை (NIC) தயாராக வைத்திருக்க வேண்டும்.

3- காணி உறுதிப் பத்திரங்கள், வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் கடந்த மூன்று மாதங்களுக்கான மின்சாரக் கட்டணப் பட்டியல்களைச் சமர்ப்பிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

4- நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நோய்கள் அல்லது நாட்பட்ட நோய்களுக்கான மருத்துவ அறிக்கைகளை வைத்திருப்பது அவசியம்.

முக்கிய குறிப்பு:

இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் அனைத்தும் எதிர்வரும் மார்ச் மாதம் 28-ஆம் திகதியுடன் நிறைவடையும். விண்ணப்பதாரர்கள் உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்குவது கட்டாயமாகும். தவறான தகவல்களை வழங்குவது நலன்புரி நன்மைகளை இழக்கச் செய்வதுடன், சட்ட ரீதியான தண்டனைகளுக்கும் வழிவகுக்கும்.

மேலதிக விபரங்களுக்கு 1924 என்ற துரித தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Quick Info
Full Details
Closing Date
Status
More Jobs
Interview Preparation Tools
Electricity Bill
Water Bill
GIF

Post a Comment

0 Comments