Subscribe Us

ஈரான் புதிய உச்ச தலைவர் யார்? நாட்டை நிர்வகிக்க 3 பேர் கொண்ட குழு நியமனம்: அலி கமேனிக்குப் பின் நடப்பது என்ன?

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை நாட்டை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட சக்திவாய்ந்த தற்காலிகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், அரசியலமைப்பு கண்காணிப்புக் குழுவின் முக்கிய உறுப்பினரான அயதுல்லா அலிரேசா அராஃபி (Ayatollah Alireza Arafi) புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். 67 வயதுடைய இவரை, ஈரானின் உயர்மட்ட நடுவர் அமைப்பான ‘எக்ஸ்பீடியன்சி கவுன்சில்’ (Expediency Council) தற்காலிகக் குழுவின் உறுப்பினராக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தற்காலிகக் குழுவில் அராஃபி உடன் இணைந்து, ஈரானின் தற்போதைய அதிபர் மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) மற்றும் நீதித்துறைத் தலைவர் கோலம்-ஹொசைன் மொஹ்சேனி-எஜெய் ஆகியோர் நாட்டை வழிநடத்துவார்கள். அதேபோல், ஈரானின் பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லாரிஜானி மற்றும் புரட்சிகர காவல்படை (IRGC) ஆகியவற்றின் செயல்பாடுகளும் இந்த அதிகார மாற்றத்தில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ஈரானின் பலம் வாய்ந்த புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமைத் தளபதி ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கமேனியின் மறைவு மற்றும் தளபதிகளின் இழப்பால் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில், IRGC-இன் அடுத்த தலைவராக அகமது வஹிதி (Ahmad Vahidi) நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் தனது அடுத்த நிரந்தர உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை இந்தப் தற்காலிகக் குழுவே நாட்டின் முழு அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும்.


Disclimer Click

Quick Info
Full Details
Closing Date
Status
More Jobs
Interview Preparation Tools
Electricity Bill
Water Bill
GIF

Post a Comment

0 Comments