பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, அந்நாட்டு அரசு எரிபொருள் விலையை லிட்டருக்கு 55 ரூபாய் (இலங்கை மதிப்பில் சுமார் 71 ரூபாய்) உயர்த்தி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விலை உயர்வுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதிய விலைப் பட்டியல் பின்வருமாறு:
பெட்ரோல்: ஒரு லிட்டர் 321 ரூபாய் (இலங்கை மதிப்பில் சுமார் 414 ரூபாய்).
அதிவேக டீசல் (HSD): ஒரு லிட்டர் 335 ரூபாய் (இலங்கை மதிப்பில் சுமார் 432 ரூபாய்).
மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் எண்ணெய் இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளன. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன. இவை அடுத்த ஏழு நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வளைகுடா போர் காரணமாகப் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் இந்த அதிரடி விலை உயர்வு அந்நாட்டு மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Disclimer Click

0 Comments