Subscribe Us

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி வான்வழித் தாக்குதலில் பலி: அரசுத் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு


மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (86) வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள அவரது அலுவலக வளாகம் மற்றும் முக்கிய இராணுவ இலக்குகளைக் குறிவைத்து இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளன. சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த தாக்குதலில், கமேனியின் அலுவலகம் தரைமட்டமானதாகவும், இடிபாடுகளுக்கு இடையில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் கமேனியுடன் சேர்ந்து அவரது மகள், மருமகன் மற்றும் பேரன் ஆகியோரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகிய முக்கியத் தலைவர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கமேனியின் மரணம் "ஈரான் மக்களுக்கான நீதி" என்றும், இது ஈரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "கமேனி இப்போது இல்லை என்பதற்கான பல அறிகுறிகள் உள்ளன" எனத் தெரிவித்தார். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதால் பிராந்தியம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.


Disclimer Click

Quick Info
Full Details
Closing Date
Status
More Jobs
Interview Preparation Tools
Electricity Bill
Water Bill
GIF

Post a Comment

0 Comments