Subscribe Us

உம்றா விசா குறித்த முக்கிய அறிவிப்பு! சவூதி ஹஜ் மற்றும் உம்றா அமைச்சகம் வெளியிட்ட புதிய விதிமுறைகள்.

சவூதி அரேபியாவிற்கு உம்றா பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள புனிதப் பயணிகளுக்காக, அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்றா அமைச்சகம் புதிய காலக்கெடு மற்றும் விதிமுறைகளை அறிவித்துள்ளது.

புதிய உம்றா விசாக்கள் வழங்குவது எதிர்வரும் ஷவ்வால் 1 முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உம்றா செல்ல விரும்புவோர் அதற்கு முன்னதாகவே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏற்கனவே உம்றா விசா வைத்திருப்பவர்கள், ஷவ்வால் 15-ஆம் திகதிக்குள் சவூதி அரேபியாவிற்குள் நுழைய வேண்டும்.

புனிதப் பயணத்தை முடித்துவிட்டு, அனைத்து உம்றா பயணிகளும் துல் கஃதா 1-ஆம் திகதிக்குள் சவூதி அரேபியாவிலிருந்து வெளியேற வேண்டும்.

உம்றா விசா என்பது உம்றா வழிபாட்டிற்கு மட்டுமே செல்லுபடியாகும்; இதனைப் பயன்படுத்தி ஹஜ் கடமையைச் செய்ய முடியாது என்பதையும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. புனிதப் பயணிகள் அனைவரும் தங்களது பயணத் திட்டத்தை இந்தத் திகதிகளுக்குள் அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


உம்ரா விசா மற்றும் இன்னும் பல தகவல்களை அறிந்திட எமது வாட்சாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள் Click 

Quick Info
Full Details
Closing Date
Status
More Jobs
Interview Preparation Tools
Electricity Bill
Water Bill
GIF

Post a Comment

0 Comments