Subscribe Us

ஈரான் தூதர்கள் மற்றும் இராணுவத் தளபதிகளுக்கு டிரம்ப் விடுத்த பகிரங்க எச்சரிக்கை! சரணடைந்தால் மன்னிப்பு - இல்லையேல் மரணம்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் நாட்டு அதிகாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் ஒரு மிகப்பாரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

உலக நாடுகளில் உள்ள ஈரானியத் தூதரகங்களில் பணியாற்றும் தூதர்கள் மற்றும் அதிகாரிகள், தற்போதைய ஈரானிய அரசாங்கத்தைக் கைவிட்டு அமெரிக்கா அல்லது பிற நாடுகளிடம் அரசியல் புகலிடம் (Asylum) கோருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதிகளுக்கு டிரம்ப் இரண்டு வழிகளை முன்வைத்துள்ளார்:

ஈரானியத் தளபதிகள் உடனடியாகத் தங்களது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்தால், அவர்களுக்குப் பிணையில்லா முழுமையான மன்னிப்பு (Immunity) வழங்கப்படும்.

அவ்வாறு சரணடைய மறுப்பவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என டிரம்ப் மிகக் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானிய அரசாங்கத்தை முழுமையாக முடக்கும் நோக்கில் அமெரிக்கா இத்தகைய இராஜதந்திர மற்றும் இராணுவ அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது. அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்பு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Disclimer Click

Quick Info
Full Details
Closing Date
Status
More Jobs
Interview Preparation Tools
Electricity Bill
Water Bill
GIF

Post a Comment

0 Comments