Subscribe Us

அட்டாளைச்சேனையில் கோர விபத்து: வாலிபர் உயிரிழப்பு! முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் சோகம்.

அட்டாளைச்சேனை 10-ஆம் பிரிவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று (மார்ச் 8, 2026) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அட்டாளைச்சேனை ஆண்கள் மத்ரசாவுக்கு முன்னால் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அங்கிருந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை 10-ஆம் பிரிவைச் சேர்ந்த சலீம் சபாத் அஹமட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 இவர் மௌலவி சப்ரி அவர்களின் சகோதரர் ஆவார்.

இந்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், சபாத் அஹமட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் ஜனாஸா தற்போது அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் நேரம் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் துஆச் செய்வோம்.


முழு வீடியோ Click 


Quick Info
Full Details
Closing Date
Status
More Jobs
Interview Preparation Tools
Electricity Bill
Water Bill
GIF

Post a Comment

0 Comments