Subscribe Us

கமேனியின் நடமாட்டத்தை இஸ்ரேல் கண்டுபிடித்தது எப்படி? ஈரானின் ரகசிய கேமராக்கள் மற்றும் போன் நெட்வொர்க்குகள் ஹேக் - பகீர் பின்னணி!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட வான்வழித் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த மிகப்பாரிய உளவுத் திட்டம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள போக்குவரத்து கேமராக்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை இஸ்ரேல் பல ஆண்டுகளாக ரகசியமாக கண்காணித்து வந்ததே இந்தத் தாக்குதலின் வெற்றிக்குக் காரணம் என்று இஸ்ரேலிய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு: 
இஸ்ரேலிய உளவுத்துறை, தெஹ்ரான் நகரின் போக்குவரத்து கேமராக்களுக்குள் ஊடுருவி, அங்கிருந்து நேரடி காட்சிகளை டெல் அவிவில் உள்ள தங்கள் சர்வர்களுக்கு பல ஆண்டுகளாக அனுப்பி வந்தது. குறிப்பாக, கமேனியின் அலுவலகம் உள்ள பாஸ்டர் வீதி (Pasteur Street) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கேமராக்கள் மூலம் அவரது மெய்க்காப்பாளர்களின் நடமாட்டம், அவர்களது பணி நேரம் மற்றும் கார் நிறுத்தப்படும் இடங்கள் வரை துல்லியமாக கண்காணிக்கப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்தின் பங்கு:
கோடிக்கணக்கான தரவுகளை (Data) ஆய்வு செய்ய செயற்கை நுண்ணறிவு (AI) அல்காரிதங்களைப் பயன்படுத்தி, கமேனி எப்போது முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்வார் என்பதை இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகள் கண்டறிந்தன. இதன் விளைவாகவே, பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை சரியாகக் கணித்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடர்புகளைத் துண்டித்த இஸ்ரேல்: 
தாக்குதல் நடத்தப்பட்ட அன்று காலை, கமேனியின் அலுவலகத்தைச் சுற்றியுள்ள சுமார் 12 மொபைல் டவர்களின் சேவையை இஸ்ரேல் முடக்கியது. இதனால் கமேனியின் பாதுகாப்புப் படையினர் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள முடியாமலும், தாக்குதல் குறித்து எவ்வித எச்சரிக்கையும் பெற முடியாமலும் போயினர். சுமார் 30 துல்லியமான ஏவுகணைகளை வீசி இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

ஈரான் தனது கேமராக்கள் மற்றும் நெட்வொர்க்குகள் பாதுகாப்பாக இருப்பதாக முன்பு கூறிவந்த நிலையில், இந்த ஹேக்கிங் சம்பவம் அந்நாட்டுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News from  X (@GlobalUpdates24)


Disclimer Click

Quick Info
Full Details
Closing Date
Status
GIF

Post a Comment

0 Comments