Subscribe Us

அதான் ஒலியைக் கேட்டு மெய்சிலிர்த்து அழுத பெண்மணி! கணவர் எடுத்த நெகிழ்ச்சியான வீடியோ - இணையத்தில் வைரலாகும் காட்சி.

இறைவனின் அழைப்பான 'அதான்' (Azan) ஒலித்ததும், ஒரு பெண்மணி எவ்வித சுயநினைவுமின்றி அமைதியாகச் செவிமடுத்து, மெய்சிலிர்த்து கண்ணீர் மல்கிய நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் பாராட்டையும் பெற்று வருகின்றது. 

தொழுகைக்கானஅதான் ஒலித்த அந்த நேரத்தில், அங்கிருந்த ஒரு பெண்மணி அந்தப் புனித ஒலியை மிகவும் ஆழமாக ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார். அந்த ஒலியின் தாக்கம் அவரது உள்ளத்தைத் தொடவே, அவர் அறியாமலேயே அவரது கண்கள் பனிக்கத் தொடங்கின. இப்பெண்ணின் இந்த உருக்கமான நிலையை அவரது கணவர் தனது அலைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

"இந்த வீடியோ காட்சியைப் பார்க்கும் பொழுது நம்மையறியாமலேயே நமக்கும் கண்ணீர் வருகிறது" என்று பலரும் இணையத்தில் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். "இந்தப் பெண்மணிக்கு அல்லாஹ் நேர்வழியை (ஹிதாயத்) வழங்கட்டும்" என்ற பிரார்த்தனைகளுடன் இந்த வீடியோ அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் போன்ற வாசகங்களுடன் வைரலாகி வருகின்றது.

வீடியோவை பார்வையிட Click 

இறைவனின் அழைப்பு எவ்வளவு கொடூரமான உள்ளத்தையும் உருக்கும் வல்லமை கொண்டது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

Quick Info
Full Details
Closing Date
Status
More Jobs
Interview Preparation Tools
Electricity Bill
Water Bill
GIF

Post a Comment

0 Comments