Subscribe Us

கிணற்றுக்குள் ஒரு மரணப் போராட்டம்!" - வவுணதீவு இளம் தாயின் துயரம்: ஒரு கண்ணீர் மடல்

தாயே உன்னையும் குற்றுயிராகத்தான் கிணற்றுக்குள் வீசியிருப்பார்கள் இந்தப் பாதகர்கள்.

எத்தனை நாட்கள் உயிருக்காய் போராடினாயோ தாயே. அந்த எலும்புக்கூட்டைக்கண்டு பயந்து பயந்தே மரணித்திருப்பாயம்மா. உயிருடன் இருக்கும்போதே புழுக்கள் உன்னை அரித்திருக்குமே தாயே எப்படித் தாங்கிக்கொண்டாய். 

யாரும் உதவிக்கு வரமாட்டார்களா என எத்தனை நாட்கள் தவித்திருப்பாய் தெய்வமே. கத்திக்கத்தியே மயங்கமுற்று ஏங்கியிருப்பாயம்மா. 

யாரும் வருவார்கள் மீட்டுவிடுவார்கள் என்று எத்தனை தெய்வங்களை நினைத்திருப்பாயம்மா. 

உன் அன்புக் கணவரின் பெயர்சொல்லி கத்தியிருப்பாய் அம்மா. உன் பிள்ளைகளை நினைத்து ஏங்கியிருப்பாய் அன்னையே. இந்தப் பாதகர்களுக்கு நீ மனதாலும் குற்றம் நினைத்திருக்க மாட்டாயம்மா. 

உன் கனவுகள் கற்பனைகளை எல்லாம் கிணற்றுக்குள் அடக்கி விட்டார்களே இந்த பேய்கள் தாயே. உன் நிலையை நினைத்து எங்கள் மனங்கள் சிதைந்து வெடிக்குதம்மா. உன் ஆவிதான் இந்தப் பாதகர்களை காட்டிக்கொடுத்திருக்கிறது தாயே. 

நீ ஒரு காவல் தெய்வமம்மா. நீ சுவர்க்க லோகத்தில் மகாறாணியாய் இருப்பாய் தாயே. சென்று வா தாயே இந்தப் பொல்லாத உலகம் உன்னை வஞ்சித்துவிட்டதம்மா. 

இந்த நரமாமிச பேய்களை நாங்கள் நரகத்துக்குக்கூட அனுப்பமாட்டோம் தாயே அணுவணுவாக அறுத்தெடுத்து அங்கமங்கமாக பிரித்தெடுத்து அங்காங்கே வீசியெறிய ஆசை தாயே. உங்கள் பிரிவால் துயருறும் உங்கள் அன்பான குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அம்மா. தங்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.


Facebook:

Mayooran Mayu

Quick Info
Full Details
Closing Date
Status
More Jobs
Interview Preparation Tools
Electricity Bill
Water Bill
GIF

Post a Comment

0 Comments