Subscribe Us

மீண்டும் வருகிறது QR முறைமை! இலங்கையில் நாளை முதல் எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடு - பதிவு செய்வது எப்படி?



மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உள்நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் தேவையைக் கருத்திற்கொண்டு, இலங்கையில் மீண்டும் தேசிய எரிபொருள் கடவுச்சீட்டு (National Fuel Pass) முறைமை அமுல்படுத்தப்படுவதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மார்ச் 15, காலை 6:00 மணி முதல் இந்த QR முறைமை நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகின்றது.

போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உங்களது வாகன உரிமையாளர் விபரம் மற்றும் அலைபேசி இலக்கம் மாறாமல் இருந்தால், https://fuelpass.gov.lk/ என்ற இணையதளத்திற்குச் சென்று உங்கள் பழைய QR குறியீட்டை உடனடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வாகன உரிமையாளர் மாறியிருந்தால், அலைபேசி இலக்கம் மாற்றப்பட்டிருந்தால் அல்லது புதிய வாகனமாக இருந்தால், மார்ச் 15 காலை 6:00 மணி முதல் அதே இணையதளத்தில் மறுபதிவு (Re-registration) செய்ய முடியும்.

இதுவரை எரிபொருள் கடவுச்சீட்டைப் பெறாதவர்கள், இணையதளத்தில் உள்ள அறிவுறுத்தல்களின்படி புதிதாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.


Step 1:


Step 2 :



Quick Info
Full Details
Closing Date
Status
More Jobs
Interview Preparation Tools
Electricity Bill
Water Bill
GIF

Post a Comment

0 Comments