Subscribe Us

T20 உலகக் கோப்பை 2026 நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி ! சஞ்சு சாம்சன் அதிரடியில் மிரட்டிய பாரதம்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்ற ICC T20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பையை உத்தேசமாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்து நியூசிலாந்தை நிலைகுலையச் செய்தது.

தொடக்க வீரராகக் களம் இறங்கிய சஞ்சு சாம்சன் வெறும் 46 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

அபிஷேக் சர்மா (52 ரன்கள் - 21 பந்து) மற்றும் இஷான் கிஷன் (54 ரன்கள் - 25 பந்து) ஆகியோரும் அரைசதம் கடந்து நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

கடைசி நேரத்தில் களமிறங்கிய சிவம துபே வெறும் 8 பந்துகளில் 26 ரன்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரி) குவித்து ஸ்கோரை 250-ஐத் தாண்டச் செய்தார்.

256 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த நியூசிலாந்து அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் வெறும் 15 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளைச் சாய்த்து நியூசிலாந்தின் சரிவை உறுதி செய்தார்.

நியூசிலாந்து தரப்பில் டிம் செய்ஃபர்ட் மட்டும் அதிரடியாக விளையாடி 52 ரன்கள் எடுத்தார். கேப்டன் மிட்செல் சான்ட்னர் 43 ரன்கள் எடுத்தபோதிலும் அது வெற்றிக்குப் போதுமானதாக இருக்கவில்லை.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மீண்டும் ஒருமுறை T20 கிரிக்கெட்டில் உலகத் தலைவனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

highlights பார்க்க Click


Quick Info
Full Details
Closing Date
Status
More Jobs
Interview Preparation Tools
Electricity Bill
Water Bill
GIF

Post a Comment

0 Comments