Subscribe Us

12 ஆண்டு காலக் காத்திருப்பு - அல்லாஹ் கொடுத்த மகா அற்புதம்! ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளைப் பெற்றெடுத்த எதியோப்பிய தாய்.

"இறைவன் கைவிடுவதில்லை" என்பதற்குச் சான்றாக, எதியோப்பியாவில் நீண்ட காலமாகத் தவம் இருந்த ஒரு தாய்க்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் உலகளவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தாய் கடந்த 12 ஆண்டுகளாகக் குழந்தை வரம் வேண்டி மாறாத நம்பிக்கையுடன் இடைவிடாது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து வந்துள்ளார். தனது மனவேதனையை வெளியே காட்டிக்கொள்ளாமல், கண்ணீரோடு அவர் செய்த துஆக்களுக்கு (பிரார்த்தனை) இன்று அழகான பதில் கிடைத்துள்ளது.

இறுதியில் அந்தத் தாயின் பிரார்த்தனையை ஏற்று, அல்லாஹ் அவருக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை (Quintuplets) பரிசாக வழங்கியுள்ளான். "நான் வலியுடனும், மன வேதனையுடனும் காத்திருந்தேன். ஆனால் இறுதியில் அல்லாஹ் எனக்கு 5 மடங்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளான்" என அந்தத் தாய் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தாயும், ஐந்து குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற அதிசயங்கள் இறை நம்பிக்கையின் வலிமையை உலகிற்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளன.

Quick Info
Full Details
Closing Date
Status
More Jobs
Interview Preparation Tools
Electricity Bill
Water Bill
GIF

Post a Comment

0 Comments