2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளைப் பரீட்சைத் திணைக்களம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்தப் பெறுபேறுகளை மாணவர்கள் இப்போது இணையதளம் மற்றும் குறுஞ்செய்தி (SMS) வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம்.
பெறுபேறுகளைப் பார்க்கும் வழிமுறைகள்:
1. இணையதளம் ஊடாக (Online):
கீழே உள்ள உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச் சென்று, உங்கள் சுட்டெண் (Index Number) அல்லது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளைப் பதிவிறக்கம் செய்யலாம்:
www.doenets.lk
www.results.exams.gov.lk
2. எஸ்எம்எஸ் (SMS) ஊடாக:
இணைய வசதி இல்லாதவர்கள், உங்களது மொபைல் போன் மூலம் எளிய முறையில் பெறுபேறுகளைப் பெறலாம்.
முறை: EXAMS <space> [உங்களது சுட்டெண்] என டைப் செய்து 7777 (Dialog/Hutch) அல்லது 8884 (Mobitel) ஆகிய இலக்கங்களுக்கு அனுப்பவும்.
(உதாரணம்: EXAMS 1002003)
மேலதிக தகவல்கள்:
மறுமதிப்பீடு: பெறுபேறுகளில் திருப்தி இல்லாத மாணவர்கள், அதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்களை இணையதளம் ஊடாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்க முடியும்.
பல்கலைக்கழக அனுமதி: Z-Score அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவுக்கான கையேடு மற்றும் மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

0 Comments